Wednesday, February 4, 2015



சமந்தா பிரபல பனியன் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்காக அவருக்கு ரூ.6 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே சமந்தா ஷு, ஜுவல்லரி மற்றும் குளிர்பானங்கள் போன்றவைகளின் விளம்பரங்களில் நடித்துக்கொண்டிருக்கும் நிலையில் சமந்தாவுக்கு இந்த புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல பனியன் நிறுவனத்துடன் இரண்டு வருட காண்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படும் சமந்தா, அந்த நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடிப்பது, அவற்றின் தயாரிப்புகளை புரமோஷன் செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுவார் என தெரிகிறது.

கத்தி வெற்றி படத்தை அடுத்து சமந்தா தற்போது விக்ரமுடன் '10 எண்றதுள்ள' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் வேலையில்லா பட்டதாரி இயக்குனர் வேல்ராஜின் அடுத்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும் அவர் நடிக்கவுள்ளார். இதுபோக இன்னும் பெயர் வைக்கப்படாத தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

0 comments:

Post a Comment