Wednesday, February 4, 2015



கடந்த 1999ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்த திரைப்படம் Hum Dil De Chuke Sanam. இந்த படத்தில் சல்மான்கான் மற்றும் ஐஸ்வர்யாராய் நடித்திருந்தனர். சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கியிருந்த இந்த திரைப்படம் பாலிவுட் படவுலகில் மாபெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் Doli Taro Dhol Baje"என்று தொடங்கும் சூப்பர் ஹிட் பாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த பாடல் தற்போது கவர்ச்சி நடிகை சன்னிலியோன் நடித்து வரும் Ek Paheli Leela என்ற படத்திற்காக ஒருசில மாற்றங்கள் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பாடலின் படப்பிடிப்பு மிகவும் பிரமாண்டமாக சுமார் 500 நடனக்கலைஞர்களுடன் மிகப்பெரிய செட் அமைத்து படமாக்கப்பட்டது. பாபிகான் இயக்கி வரும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment