அப்படியேதான் இருக்கிறார்! சிரஞ்சீவியின் ரசிகர்கள் கவலை
ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகத்தின் பார்வை மெகா ஸ்டார் சிரஞ்சீவியை நோக்கித்தான் இருக்கிறது. கூடிய விரைவில் சிரஞ்சீவி அவருடைய 150வது படத்தில் நடிக்கவிருக்கிறார். அரசியல், கட்சி மீட்டிங் என அலைந்து கொண்டிருந்ததால் உடலை சரியாக பாதுகாக்க முடியாமல்போனதால் தற்போது கேரளாவில் ஆயுர்வேத தெரபி செய்து கொள்ள சென்றிருந்தார், இதனால் அவருடைய ரசிகர்கள் சிரஞ்சீவியின் புதிய தோற்றத்தை காண ஆவலோடு இருந்தார்கள், நேற்று நடைபெற்ற தனியார் தொலைக்காட்சியின் ஸ்டார்ஸ் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு வந்திருந்த சிரஞ்சீவியை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சிகிச்சை எடுக்கப்போன மெகா ஸ்டார் இன்னும் அப்படியேதான் இருக்கிறார். அவர் உடலில் எந்த மாற்றமும் தெரியவில்லை என கவலைப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் சிரஞ்சீவியின் ரசிகர்கள். ஒருவேளை இன்னும் தெரபி வேலைகள் முடியாமல்கூட இருக்கலாம், படப்பிடிப்பு துவங்குவதற்கு இன்னும் நாட்கள் உள்ளதால் அதற்குள் அவருடைய தோற்றம் மாறுகிறதா என்று பொருத்திருந்துதான் பார்க்கனும்.
.jpeg)
0 comments:
Post a Comment