Thursday, February 12, 2015


இந்த புள்ள சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்குல்ல என்று டோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு முன்னணி பத்திரிக்கைக்கு பேட்டியளித்த சமந்தா அவருடைய சம்பளம் குறித்த கேள்விக்கு ஒரு நீண்ட உரையே கொடுத்திருக்கிறார். 

சினிமா பழைய மாதிரி இல்ல சார், இப்ப படம் பார்க்க வருபவர்கள் ஹிரோ யாருன்னு பார்த்துட்டு வர்றதுல்ல, ஹிரோயின் யாருன்னு தான் பார்த்துட்டு வர்றாங்க, அந்தளவுக்கு காலம் மாறிப்போச்சு. ரசிகர்களே இப்படி மாறும்போது நடிகைகள் நாங்கள் ஏன் எங்க சம்பளத்தை உயர்த்தி கேட்ககூடாது. 

நான் எல்லா படத்துக்கும் சம்பளத்தை உயர்த்தி கேட்கலையே எனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரமாக இருந்தால் சம்பளத்தை குறைத்துக் கொள்ளவும் நான் தயார் என்று கூறியுள்ளார் சமந்தா.தற்போது சமந்தா தெலுங்கில் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில், அல்லு அர்ஜுனுடன் இணைந்து சன் ஆஃப் சத்யமூர்த்தி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

0 comments:

Post a Comment