தான் நடித்த 3 படத்தில் ஒரு பாடலை எழுதி, பாடியிருந்த தனுஷ் அடுத்தடுத்த நடிக்கும் படங்களிலும் பாடல்களை எழுதி பாடியும் வருகிறார்.
வேல்ராஜ் இயக்கிய வேலையில்லா பட்டதாரி படத்தில் மொத்த பாடலையும் எழுதிய தனுஷ், அப்படத்தில் பாடிய அம்மா அம்மா, வாட் ய கருவாட் ஆகிய பாடல்கள் செம ஹிட்.
தற்போது அனேகன் படத்திலும் தனுஷ் பாடிய டங்கா மாரி பாடல் ஹிட்டோ ஹிட். இப்போதெல்லாம் தனுஷ் பாடிய பாடல்களுக்கு ஆடியோ ரைட்சுக்கும் வரவேற்பு கிடைக்கிறதாம்.
மீண்டும் வேல்ராஜ் இயக்க இருக்கும் படத்திலும் தனுஷ் முழுப்பாடல்களையும் தானே எழுதுகிறாராம். அனிருத்தும் இப்படத்திற்காக பாடல் கம்போஸ் வேலைகளில் இறங்கிவிட்டாராம். இதனால் படப்பிடிப்பு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் டியூன்களை கேட்டபடி பாடல்களை எழுதுகிறாராம்.
0 comments:
Post a Comment