Monday, February 23, 2015


தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படம் பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து மீண்டும் இப்படக்குழுவினர் சேர்ந்து புதிய படத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர். 

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தில் தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கவிருக்கின்றனர். இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் உள்ளவர்களே கவனிக்கின்றனர். 

அனிருத் இசையமைக்க, அனைத்து பாடல்களையும் தனுஷ் எழுதுகிறார். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திலும் எல்லா பாடல்களையும் தனுஷே எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் பாடல் பதிவை தொடங்கியுள்ளனர். 

இதுகுறித்து தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘வேலையில்லா பட்டதாரி’ படக்குழு இணையும் அடுத்த படத்தின் இசைப் பணியை அனிருத் தொடங்கிவிட்டார். அவருக்கு வாழ்த்துக்கள். இந்த மேதையின் இசை எப்போதும் ஒரு மாய உணர்வை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார். 

தனுஷ் தற்போது ‘மாரி’ படத்தின் படவேலைகளில் பிசியாக இருக்கிறார். இப்படத்தை முடித்துவிட்டு ‘வேலையில்லா பட்டதாரி’ படக்குழுவுடன் இணைவார் என்று கூறப்படுகிறது. 

அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘காக்கிசட்டை’ வருகிற 27-ந் தேதி வெளியாகவிருக்கிறது. மேலும், விஜய்சேதுபதி நடிக்கும் ‘நானும் ரௌடிதான்’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

0 comments:

Post a Comment