காக்கி சட்டை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “தனக்கு இரண்டாவது முறையாக வாய்ப்பு அளித்த தனுஷ், மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார், இசையமைப்பாளர் அனிருத் என படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தனது நன்றிகளை பதிவு செய்தார்.
எனது அப்பாவும் போலீசாக பணிபுரிந்தார் அவரை பார்த்துதான் நான் வளர்த்தேன். நானும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக வரவேண்டும் என்பதுதான் அவரின் ஆசை. ஆனால் அவரது இறப்புக்கு பின் எனது வாழ்க்கையில் பல மாற்றங்கள். அப்பாவின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்ற பீல் எனக்குள் இருந்து கொண்டேயிருந்தது. எனக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு நன்றி.
மேலும் தனுஷ் குறித்து கூறுகையில், “எனக்கும் தனுஷுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. என்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவா அதுவும் போலீஸா நடிக்க வைக்க ஒத்துகிட்டதுக்கே நான் நன்றி சொல்லணும் என நெகிழ்ந்தார் சிவகார்த்திகேயன்.
0 comments:
Post a Comment