
சிங்கம், சிங்கம் 2 படங்களின் வெற்றியை அடுத்து மீண்டும் சூர்யா-ஹரி கூட்டணியில் சிங்கம் 3 விரைவில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் இரண்டு படங்களில் நடித்த ராசியான நடிகையான அனுஷ்காவை மூன்றாவது பாகத்திலும் நடிக்க வைக்க ஹரி முயற்சி செய்வதாக தகவல்கள் கூறுகின்றன.
முதல் இரண்டு படங்களிலும் சூர்யா-அனுஷ்காவின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதை ஒட்டி மூன்றாவது பாகத்திலும் இருவரும் இணைந்தால் படத்தின் வெற்றிக்கு பெரும் உதவியாக இருக்கும் என ஹரியின் தரப்பு கருதுகிறது. மேலும் தற்போது அனுஷ்கா, ருத்ரம்மாதேவி, பாஹுபாலி ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது இன்னும் பெயர் வைக்கப்படாத ராகவேந்திர ராவ் அவர்களின் மகன் பிரகாஷ் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வருட இறுதியில் சிங்கம் 3 படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. , அதற்குள் சூர்யா தற்போது நடித்து கொண்டிருக்கும் மாஸ் மற்றும் விரைவில் ஆரம்பமாகவுள்ள பாண்டிராஜ் படம் ஆகியவற்றை முடித்துவிடுவார் என கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment