ஏப்ரல் 2 -ஆம் தேதி கார்த்தி நடித்துள்ள கொம்பன், உதயநிதி நடித்துள்ள நண்பேன்டா ஆகியவை திரைக்கு வருகின்றன. அதேநாள் கமலின் உத்தம வில்லனும் திரைக்கு வருவதாக ஒரு வதந்தி நிலவுகிறது.

இந்நிலையில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கியிருக்கும், புறம்போக்கு படத்தை ஏப்ரல் முதல்வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

விஜய் சேதுபதி, ஆர்யா, ஷாம், கார்த்திகா நாயர் நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. விரைவில் பாடல்களையும் வெளியிட உள்ளனர்.
யுடிவியுடன் இணைந்து எஸ்.பி.ஜனநாதன் படத்தை தயாரித்துள்ளார்.
0 comments:
Post a Comment