Tuesday, February 10, 2015

கே.வி. ஆனந்தால் தான் என்னை அறிந்தால் கூட்டணி உருவானதா? - Cineulagam
இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த். இவர் ஒரு நல்ல ஒளிப்பதிவாளர் மட்டுமின்றி அயன், கோ போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனரும் கூட. இவரின் பேவரட் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தான்.
அதேபோல் கௌதம் மேனன் அவர்களுக்கும் மிகவும் பேவரட் ஹாரிஸ் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால், ஒரு சில பிரச்சனைகளால் இருவரும் சில வருடங்கள் பிரிந்து விட்டனர்.
இதன் பிறகு இவர்கள் எப்போது இணைவார்கள் என்று ரசிகர்கள் காத்திருக்க, என்னை அறிந்தால் படத்தின் மூலம் இந்த கூட்டணி இணைந்து அனைவரையும் திருப்திப்படுத்தியது.
மேலும், இந்த கூட்டணி மீண்டும் இணைவதற்கு முக்கிய காரணம் கே.வி.ஆனந்த் தானாம். இவர் தான் இருவருக்குமிடையே பிரச்சனையை பேசி முடிவுக்கு கொண்டு வந்தாராம்.

0 comments:

Post a Comment