Tuesday, February 10, 2015


தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக விளங்கியவர் தமன்னா. தமிழில் கடைசியாக அஜீத் நடித்த வீரம் படத்தில் நடித்தார். தற்போது அறிமுகமான சில இயக்குனர்களுக்கு போன் போட்டு நலம் விசாரிப்பது, வாழ்த்து செய்திகள் அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுயிருக்கிறார். இதன் விளைவு உதயநிதி நடிக்கும் நண்பேன்டா படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதோடு, ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போட்டு தன் மார்க்கெட்டை உயர்த்தும் வகையில் ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார். இந்த பாட்டு ஆட படத்தின் நாயகியான நயன்தாராவிடம் கேட்டுள்ளனர். அம்மணி ஆட மாட்டேன் என்று மறுத்துவிடவே தமன்னாவிற்கு சான்ஸ் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆர்யாவுடன், தமன்னா நடித்து வருகிறார்.

0 comments:

Post a Comment