Monday, February 23, 2015

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையை பின்னணியாக கொண்டு வெளியான 'குப்பி' படம் மற்றும் சந்தனக்கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மையமாக கொண்டு வெளிவந்த 'வனயுத்தம்' ஆகிய படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ், தற்போது இயக்கவுள்ள அடுத்த படம் 'ஒரு மெல்லிசான கோடு.

அஜீத்தின் என்னை அறிந்தால்' படத்தின் டீசரின் மூலம் பிரபலமான இந்த வசனத்தை டைட்டிலாக கொண்டு உருவாக இருக்கும் இந்த படம், முந்தைய ரமேஷ் படங்கள் போலவே ஒரு உண்மைக்கதையை அடிப்படையாக கொண்டது என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் ஸ்கிரிப்டை படித்ததும் மிகவும் இம்ப்ரஸ் ஆகிவிட்டதாகவும், திரைக்கதையை ஒவ்வொரு ஸ்டெப்பாக ரமேஷ் நகர்த்தி சென்ற விதம் தன்னை மிகவும் கவர்ந்ததால் உடனே நடிக்க ஒப்புக்கொண்டதாக இந்த படத்தின் நாயகன் அர்ஜூன் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் அர்ஜூன் ஒரு போராட்டக்காரராகவும், அவரை அடக்கும் கேரக்டரில் ஷாமும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆக்சன் த்ரில்லராக உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. தமிழ் ரசிகர்கள் மிகவிரைவில் மீண்டும் ஒரு உண்மைக்கதையை திரையில் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது

0 comments:

Post a Comment