உத்தம வில்லனுக்காக அமெரிக்காவில் இருந்து வரும் நடிகை
கமல்ஹாசன் நடித்த 'உத்தம வில்லன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 1ஆம் தேதி நடைபெற உள்ளதாக உறுதியாக்கப்பட்ட நிலையில் இந்த விழாவுக்காக இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை பூஜாகுமார் அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் நடிகை, தயாரிப்பாளர், மாடல் மற்றும் தொலைக்காட்சி வர்ணனையாளர் என பிசியாக இருக்கும் நடிகை பூஜாகுமார் உத்தமவில்லன் படத்தின் இசை விழாவுக்கு கமல்ஹாசனின் தனிப்பட்ட அழைப்பினால் வருவதாக கூறப்படுகிறது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் மிகவும் வித்தியாசமாக இதுவரை கமல்ஹாசன் படங்களில் நடித்த வில்லன்கள் சிறப்பாக கெளரவிக்கப்படவுள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
கமல்ஹாசன், பூஜாகுமார், ஆண்ட்ரியா, ஜெயராம், ஊர்வசி, பார்வதி நாயர், மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தில் பிரபல இயக்குனர்கள் கே.விஸ்வநாத் மற்றும் கே.பாலசந்தர் ஆகியோர்களும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்

0 comments:
Post a Comment