சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா பிரச்சனை இழுத்துக்கொண்டே போவதை இருதரப்பும் விரும்பாத நிலையில் தற்போது சமாதான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
விநியோகிஸ்தர்களின் தரப்பில் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டம் குறித்த கணக்கை நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், சரத்குமார் வரும் திங்கட்கிழமை ரஜினியை சந்தித்த பின்னர் இருதரப்பினர்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவலை சரத்குமார் தனது அதிகாரபூர்வமான சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். எனவே சரத்குமாரின் முயற்சியால் லிங்கா பிரச்சனை கூடியவிரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று அனைத்து தரப்பினர்களாலும் நம்பப்படுகிறது.
Home
»
cinema
»
cinema.tamil
»
lingaa
»
rajini
»
sarathkumar
» லிங்காவின் சமாதானத்தூதுவர் ஆகிறார் சரத்குமார்?
Monday, February 23, 2015
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment