Monday, February 23, 2015


மெல்றதுக்கு ஒண்ணுமே இல்லன்னா, ஓரமா எரியுற அடுப்பு நெருப்பை கூட அள்ளிப் போட்டுப்பாய்ங்க போலிருக்கு! அந்த செய்தியை படிக்கும் போதெல்லாம் அப்படிதான் தோன்றுகிறது. வேறொன்றுமில்லை, ரஜினி லிங்கா படத்தின் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு தருவதாக ஒப்புக் கொண்டாரல்லவா? இந்த பணத்தை கொடுத்துவிடலாம் என்று கூறியதே தனுஷ்தான் என்று இட்டு கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் இங்கே.
ரஜினியின் அனுபவத்திற்கு முன் தனுஷ் ஒன்றுமேயில்லை! அவருக்கு தெரியாதா, இந்த விஷயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று? இவரிடமா ஐடியா கேட்பார் ரஜினி? அல்லது இப்படி நடந்துக்கலாம் என்று சொல்கிற அளவுக்கு தனுஷ் ரஜினியை மடக்கிவிடதான் முடியுமா?
இதையெல்லாம் விடுங்கள். கடந்த சில மாதங்களாகவே தனுஷ், தனது மாமனாரான ரஜினி வீட்டுக்கு அதிகமாக செல்வதும் இல்லையாம். தானுண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பதாக கூறுகிறார்கள் கோடம்பாக்கத்தில். ஏதாவது விசேஷ நாட்களில் மட்டும் ஃபார்மாலிடிக்காக அங்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறாராம். நிஜம் இப்படியிருக்க, இந்த பேத்தல் சமாச்சாரங்களை யார் கிளப்பிவிடுகிறார்கள் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.

0 comments:

Post a Comment