பல பிரச்சனைகளை தாண்டி கத்தி படம் வெளிவந்து வெற்றிபெற்றதையடுத்து விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் புலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் யார் யார் நடிக்கின்றனர் என்பதையெல்லாம் நாம் நன்றாக அறிந்திருப்போம். தற்போது படத்தை பற்றி ஒரு சுவாரஸ்ய தகவல் வந்துள்ளது.
கத்தி படத்தில் சுபாஸ்கரனின் தயாரிப்பில் நடித்ததால் விஜய்க்கு ஈழத்தமிழர்கள் மத்தியில் செல்வாக்கு சரிந்துவிட்டது. இழந்த செல்வாக்கை மீண்டும் பெறும் திட்டத்திலேயே ஈழத் தமிழர்களுக்கு பிடித்த புலி என்ற பெயரை வைக்கச் சொன்னாராம் விஜய்.
கி.மு.வில் கோமு என்ற சித்திரக்கதையை பலர் படித்திருப்பர். இந்த கதையை சிம்புதேவன் பிரபல வார இதழில் ஓவியராக பணியாற்றியபோது எழுதிய கதையாம். இந்தக் கதைதான் புலி படத்தின் கதை என்று கூறப்படுகிறது. ஆனால் படத்தின் கதைக்கும், புலி என்ற பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம்.
அதேபோல் விஜய்க்கு புலி படத்தில் இரண்டு வேடம் கிடையாதாம். ஒரே வேடம் தான், இரண்டு காலகட்டங்களில் வாழ்கிற ஒரே விஜய்.
தற்போது படத்தை பற்றி வெளிவந்துள்ள செய்தியை உண்மையா என்று அரிய நாம் கி.மு.வில் கோமு என்ற கதையை படித்தால் தான் தெரியும்.
0 comments:
Post a Comment