Tuesday, February 10, 2015


ளையதளபதி விஜய் தற்போது சிம்புதேவன் டைரக்சனில் 'புலி'  படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்துடைய படப்பிடிப்பு 70 சதவிகிதம் நிறைவடைந்து விட்டதாம். மேலும் வருகிற மே மாதம் இப்படம் ரிலீசாக உள்ளதாம். விஜய் புலி படத்தையடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் 59 வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

விஜய் மற்றும் ஜி. வி. பிரகாஷ் கூட்டணியில் 'தலைவா' படம் உருவாகியிருந்தது. அந்த படத்தில் விஜய் ஜி.வி இசையில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா' பாடலை பாடியிருந்தார். அந்த பாடல் சூப்பர் ஹிட்டாகியிருந்தது. தற்போது விஜய் அட்லியுடன் இணையும் தனது 59 வது படத்திலும் ஒரு பாடல் பாடவிருப்பதாக ஜி.வி.பிரகாஷ் சமீபத்தில் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment