
தனுஷின் முதல் இந்திப் படம் ராஞ்சனாவை இயக்கிய ஆனந்த் எல்.ராயின் இயக்கத்தில் மீண்டும் தனுஷ் நடிக்கிறார்.
ராஞ்சனா படத்தின் மூலம் தனுஷை இந்தியில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஆனந்த் எல்.ராய். ராஞ்சனா உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. தனுஷுக்கும் நல்ல பெயர்.
தனுஷின் இரண்டாவது இந்திப் படம் ஷமிதாப் தற்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அமிதாப்புக்கு இணையான நடிப்பை தனுஷும், அக்ஷராவும் வழங்கியுள்ளனர். படத்தில் அமிதாப் தவிர்த்த முக்கியமான நபர்கள் - இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், ஹீரோ, ஹீரோயின் - தமிழர்கள் என்பதால் இந்தி மற்றும் ஆங்கில ஊடகங்கள் திட்டமிட்டு அமிதாப் தவிர்த்த மற்றவர்களின் பங்களிப்பை இருட்டடிப்பு செய்தன. படம் சுமார் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த இருட்டடிப்புக்குப் பிறகும் நல்ல படம் என்ற பெயரை ஷமிதாப் பெற்றுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார். தற்போது மாதவன், கங்கனா ரனவத் நடிப்பில் தனது, தனு வெட்ஸ் மனு படத்தின் இரண்டாம் பாகத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கி வருகிறார்.
0 comments:
Post a Comment