என்னை அறிந்தால் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து சமீபத்தில் நடிகர் விவேக் பேட்டியளித்துள்ளார்.
இதில் இவரிடம் ‘படம் தற்போது வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதன் பிறகு அஜித் உங்களிடன் பேசினாரா?’ என்று கேட்டனர்.
அதற்கு அவர் ‘அஜித் என்னை போனில் அழைத்து, விவேக் இந்த படம் என் வாழ் நாளில் பெரிய ஓப்பனிங் கிடைத்த படம், ரசிகர்கள் நமக்கு பெரிய வெற்றியை கொடுத்துள்ளனர்.
ஆனால், இந்த வெற்றியை நாம் ஒரு போது தலையில் ஏற்றி கொள்ள கூடாது, அடுத்த வேலையை பார்க்க ஆரம்பிப்போம்’ என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment