சமந்தாவின் 'காதலர் தின' திட்டம்
பிரபல கோலிவுட், டோலிவுட் முன்னணி நடிகைகள் வரும் 'காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு வரும் நிலையில் நடிகை சமந்தா ஐதராபாத்தில் உள்ள பிரபல ஷோரூம் ஒன்றை அன்றையை தினத்தில் திறக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள அமீர்பெட் என்ற இடத்தில் வரும் 14ஆம் தேதி 'சவுத் இந்தியா ஷாப்பிங் மால்' திறக்கப்படவுள்ளது. இந்த திறப்பு விழாவுக்கு வருகை தர நடிகை சமந்தா பெரிய தொகை ஒன்றை பெற்றுக்கொண்டு ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த திறப்பு விழாவுக்கான அழைப்பிதழில் தங்க நிறத்தில் உடையும், ஜொலிக்கும் நகைகளுடனும் சமந்தா காட்சியளிக்கின்றார். இதே நிறுவனத்தின் கிளை ஒன்றை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் KPHB என்ற பகுதியில் நடிகர் மகேஷ்பாபு திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது .தற்போது மகேஷ்பாபுவின் இடத்தை பிடித்துள்ளார் சமந்தா.
.jpg)
0 comments:
Post a Comment