தமிழ், மற்றும் தென்னிந்திய முன்னணி நடிகையான சமந்தா ஆடைகள், ஆபரணங்கள், மற்றும் காலணி விளம்பரங்களில் தோன்றுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று சமந்தா உள்ளாடை விளம்பரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் எனவும், அதற்காக 6 கோடி சம்பளம் எனவும் செய்திகள் பரவியது.
இதற்கு ட்விட்டரில் ’ஒண்ணுமே இல்லாத விஷயத்து பின்னாடி போகணுமா? . இப்படி ஒரு செய்தியே வெளியாகவில்லையே’ என கேட்க, அதற்கு டாப்சியும் தனது கருத்தாக ’இப்போதெல்லாம் நியூஸ் உலகம் வேறு கிரகத்தில் செய்லபடுகிறது போல. உண்மை நிலையை சொல்வதே இல்லை’ என கிண்டலடித்துள்ளனர்.
இதே பாணியில் சமீபத்தில் நயன்தாராவும் உண்மையை உணர்ந்து செய்தி வெளியிடுங்கள் என கூறியது குறிப்பிடத்தக்கது. இப்படி நடிகைகள் தங்களை பற்றிய கிசுகிசுக்களுக்கு தாங்களே முன்வந்து சமூக வலைகள், இணையம் மூலமாக முற்றுப்புள்ளி வைக்க தொடங்கியுள்ளனர்.

0 comments:
Post a Comment