சூர்யாவுடன் ‘சிங்கம்’, ‘சிங்கம்-2’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்த அனுஷ்கா, மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
‘சிங்கம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இயக்குனர் ஹரி, சூர்யாவை வைத்து ‘சிங்கம்-2’ படத்தை எடுத்தார். தற்போது, இந்த படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதால், தற்போது இப்படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகி வருகிறார். இதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் ஹரி.
இப்படத்திலும் சூர்யாவையே நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், முந்தைய இரண்டு பாகத்திலும் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த அனுஷ்காவை இந்த படத்திலும் நடிக்க வைக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.
‘சிங்கம்’ இரண்டு பாகத்திலும் சூர்யா-அனுஷ்கா ஜோடி ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்தது. ஆகையால், இதிலும் அவர்கள் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என படக்குழுவினர் நம்புகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பை இந்த வருடத்தின் இறுதியில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், இவரது நடிப்பில் தெலுங்கில் ‘பாகுபலி’, ‘ருத்ரமாதேவி’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இப்படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது துபாயில் அனுஷ்கா ஓய்வெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
துபாயில் இருந்து திரும்பியவுடன் தெலுங்கில் ராகவேந்திரா ராவின் மகன் பிரகாஷ் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அனுஷ்காவுக்கு இரட்டை வேடம். இதில், ஒரு வேடத்திற்காக தனது உடல் எடையை அனுஷ்கா உயர்த்தப் போகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Sunday, February 8, 2015
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment