Sunday, February 8, 2015


சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம் ‘மாஸ்’. இதன் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இப்படத்திற்கான எடிட்டிங் பணிகளை தற்போது தொடங்கியுள்ளனர். இந்த பணியை பிரவீன் கே.எல். மேற்கொள்ளவிருக்கிறார். 

‘மாஸ்’ படத்தில் கதாநாயகிகளாக நயன்தாரா, ப்ரணிதா ஆகியோர் நடிக்கின்றனர். சமுத்திரகனி, பார்த்திபன், மதுசூதன், ஸ்ரீராம், கருணாஸ், பிரேம்ஜி அமரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் முக்கியமான காட்சிகளை சமீபத்தில் தூத்துக்குடி அருகில் படமாக்கினர். திகில் கலந்த காமெடி படமாக உருவாகும் இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

0 comments:

Post a Comment