Tuesday, February 24, 2015


இளைய தளபதி விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் நடித்துவரும் படம் புலி.
இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக கேரளாவில் உள்ள காட்டுப்பகுதியில் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் இளைய திலகம் பிரபு நடித்து வருகிறார்,
இவருடைய கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. அதாவது ராஜா காலத்தில் தளபதியாக இருக்கும் விஜய் அவருக்கு ஆணையிடும் குருவாக பிரபுவின் கதாபாத்திரம் வடிவமைக்க பட்டுள்ளதாம்.
அது மட்டுமில்லாமல் ஸ்ரீதேவி ராணியாகவும் அவருடைய பெண்ணாக இளவரசி கதாபாத்திரம் ஹன்சிகாவும் நடித்து வருகிறார். படத்தை எப்படியாவது ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment