Wednesday, February 11, 2015

சோனம் கபூருக்கு மூச்சு திணறல்
பாலிவுட் நடிகர் அனில் கபூர் மகள் சோனம் கபூர். தனுஷ் இந்தியில் நடித்த ‘ராஞ்சனா‘ படத்தில் அவருக்கு ஜோடியாக சோனம் நடித்தார். தற்போது ‘பிரேம் ரத்தன் தன் பாயோ‘ படத்தில் சல்மான் கானுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு புனேவில் உள்ள கர்ஜாட் பகுதியில் நடந்தது. மேக்அப்வுடன் படப்பிடிப்புக்கு வந்த சோனம் திடீரென்று சோர்வடைந்தார். மூச்சுவிட சிரமப்பட்டார். உடனடியாக அவர் மும்பை அழைத்து வரப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த டாக்டர், சுவாசகோளாறு ஏற்பட்டிருப்பதால் மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது என்று கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளித்தனர். சோர்வாக இருந்த சோனத்துக்கு குளுகோஸ் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் பட குழுவில் பரபரப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்த சோனம் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற போட்டோவை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

0 comments:

Post a Comment