Wednesday, February 11, 2015

சர்ச்சையில் சிக்கமாட்டேன்
ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ள படம் ‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்‘. இப் படத்தின் பாடல் காட்சி மற்றும் டிரெய்லர் பட குழுவினருக்கு நேற்று திரையிடப்பட்டது. ஹீரோ நகுல், ஹீரோயின்கள் பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா, காமெடி நடிகர் சதீஷ், இசை அமைப்பாளர் தமன், தயாரிப்பாளர் வி.சந்திரன், கவிஞர் கார்க்கி பங்கேற்றனர்.

இப்படத்தை ரிலீஸ் செய்வது பற்றி உதயநிதி ஸ்டாலின் கூறும்போது,‘ரெட் ஜெயன்ட் மூவிஸ் தரமான படங்களை வாங்கி ரிலீஸ் செய்து அதில் 100 சதவீதம் வெற்றியும் பெற்றிருக்கிறது. இப்படத்தை பார்த்தபோது இது வழக்கமான ஒரு படம் கிடையாது என்பது தெரிந்தது. எனவே அதனை வெளியிட முடிவு செய்தேன். இம்மாதம் 20ம் தேதி ரிலீஸ் ஆகிறது‘ என்றார். நகுல் கூறும்போது, ‘இப்படத்துக்காக 70 அடி உயரத்தில் செல்போன் டவர் அமைக்கப்பட்டது. அதன் உச்சியில் என்னை ஏற வைத்து படமாக்கினார்கள். அங்கிருந்தபடி சென்னை முழுவதையும் என்னால் பார்க்க முடிந்தது‘ என்றார்.

ஹீரோயின் பிந்துமாதவி பேசும்போது, ‘என்னிடம் ஏதாவது சர்ச்சைக்குரிய மேட்டர் இருக்கிறதா? அதை கூறும்படி மீடியாவினர் சொன்னார்கள். சர்ச்சையில் நான் சிக்க மாட்டேன். இப்படத்தின் கதை வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கிறதுÕ என்றார்.

0 comments:

Post a Comment