Wednesday, February 11, 2015

கார்த்தி-நாகர்ஜூனா இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது‘மெட்ராஸ்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கார்த்தி ‘கொம்பன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து, தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனாவுடன் இணைந்து தமிழ் படமொன்றில் கார்த்தி நடிக்கவிருப்பதாக செய்தி வெளியானது. அப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் தொடங்கியது.

இப்படம் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் தயாராகிறது. கார்த்தி நடித்த சில படங்கள் தெலுங்கிலும் ரீமேக்காகி வெற்றி பெற்றிருக்கின்றன. அங்கும், கார்த்திக்கென்று ரசிகர்கள் வட்டாரம் உள்ளது. எனவே, அவரை இப்படத்திற்கு தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

கார்த்தி-நாகர்ஜூனா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை நாகர்ஜூனாவின் மனைவியும், நடிகையுமான அமலா கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். இப்படத்தை பிவிபி சினிமாஸ் தயாரிக்கிறது. வம்சி பைடிபாலி இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலை விரைவில் வெளியிடவுள்ளனர்.

0 comments:

Post a Comment