Wednesday, February 11, 2015

ரஜினியின் முடிவுக்காக காத்திருக்கும் வினியோகஸ்தர்கள்
ரஜினி நடித்த படம் லிங்கா. கே.எஸ்.ரவிகுமார் இயக்கினார். ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்தார். இப்படத்தை வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர்கள் தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அதற்கான நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கேட்டும் போராட்டம் நடத்தினார்கள். இந்த விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை. ரஜினிகாந்த் தங்களுக்கு நஷ்டஈடு தரவேண்டும் என்று வினியோகஸ்தர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியத்தை தொடர்பு கொண்ட ரஜினி, ‘லிங்கா‘ படத்தின் வசூல் விவரம் மற்றும் லாப நஷ்ட விவரங்களை சேகரித்து அளிக்குமாறு கேட்டிருந்தார். அந்த விவரங்களை சேகரித்து ரஜினியிடம் அவர் சமீபத்தில் ஒப்படைத்தார். விவரத்தை அறிந்த ரஜினி பின்னர் அந்த பட்டியலை தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷுக்கு அனுப்பி, ‘உங்களால் எவ்வளவு நஷ்டஈடு தர முடியும்‘ என்பதை தெரிவிக்கும்படி கூறினார்.

இதையடுத்து ராக்லைன் வெங்கடேஷ் படத்தை வாங்கி பின்னர் அதை மறுவிற்பனை செய்த ஈராஸ் நிறுவனத்திடம் இதுதொடர்பாக பேசினார். ஆனால் நஷ்டஈடு பற்றி சாதகமான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. அந்நிறுவனம் நஷ்ட ஈடு தொகையை தர ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து இதுதொடர்பாக ரஜினி என்ன முடிவு எடுக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள வினியோகஸ்தர்கள் மேலும் சில நாட்கள் காத்திருக்க வேண்டி இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

0 comments:

Post a Comment