Tuesday, February 24, 2015

பிரபு சாலமனை முற்றுகையிடும் நாயகிகள் - Cineulagam


பிரபு சாலமன் படம் என்றாலே அவர் படத்தில் நடிக்கும் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுப்பார். இதுவரை அவர் இயக்கத்தில் நடித்த அமலாபால், லட்சுமி மேனன், ஆனந்தி ஆகியோர் அவருடைய படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் பிரபல நாயகிகளாக வலம் வருகின்றனர்.
இந்நிலையில் பிரபு சாலமன் அடுத்து தனுஷை வைத்து ஒரு புதிய படம் இயக்க இருக்கிறார். தனுஷ் என்பதால் பிரபல நடிகைகளை தான் அவர் தேர்வு செய்வார் என்று பல புதுமுக நாயகிகள் எண்ணினர்.
ஆனால் தற்போது பிரபு சாலமன் தனுஷ் என்றாலும், அவருடன் நடிக்க போவது புதுமுக நடிகைதான் என்று சில புதுமுகங்களின் ஆல்பங்களை வரவைத்து தேர்வு செய்யும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்.
இதனால் கோலிவுட் மட்டுமில்லாது கேரளா, ஐதராபாத்தில் இருந்தும் வளர்ந்து வரும் நடிகைகள் பிரபு சாலமனை முற்றுகையிட்டு சான்ஸ் கேட்கின்றனராம்.

0 comments:

Post a Comment