Tuesday, February 24, 2015

லிங்கா பிரச்சனை பற்றி விஜய்க்கு தெரியவே தெரியாதாம் ! - Cineulagam


லிங்கா படம் ஆரம்பித்த நேரம்மே சரியில்லை போல. ரஜினியின் லிங்கா படம் ஓடவில்லை தோல்வியடைந்து விட்டது, அதனால் எங்களுக்கு நஷ்டஈடு தரவேண்டும் என்று விநியோகஸ்தர்கள் பல வகையில் போராட்டங்களும், பிரச்சனைகளையும் கிளப்பி வருகின்றனர்.
தற்போது இப்பிரச்சனை தான் சூடு பிடித்து இருக்கிறது. சமீபத்தில் கூட ரஜினியை நஷ்டஈட்டை தரவிடாமல் சரத்குமார், விஜய் ஆகியோர் தடுப்பதாக செய்தி கூட வந்திருந்தது.
இந்த வதந்திக்கு சரத்குமார் கூட நான் அப்படி எதுவும் கூறவில்லை என்று பதில் அளித்திருந்தார். ஆனால் விஜய் இதுவரை எந்த மறுப்பும் சொல்லாத நிலையில், அவரது தந்தையான எஸ்.வி. சேகர் தற்போது பதில் அளித்துள்ளார்.
லிங்கா பட பிரச்சனை குறித்து விஜய்க்கு தெரியாது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் அவரை தேவையில்லாமல் இந்த பிரச்சனைக்குள் இழுப்பது நியாயமே இல்லை என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment