இளையதளபதி விஜய் தற்போது புலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று புலி படக்குழுவினர் 820 பேர்களுக்கு தனது செலவில் பிரியாணி தயார் செய்து அனைவருக்கும் அவரே பரிமாறியதாகவும் தகவல் கிடைத்துள்ளன.
ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு நிறைவு நாளின்போதும் அஜீத் வழக்கமாக தனது படக்குழுவினர்களுக்கு பிரியாணி தானே தனது கையால் தயாரித்து வழங்குவது வழக்கம். சமீபத்தில் சிவகார்த்திகேயனும் தனது பிறந்தநாளில் ரஜினி முருகன் படக்குழுவினர்களுக்கு பிரியாணி வழங்கினார். இந்நிலையில் தற்போது விஜய்யும் பிரியாணி வழங்கியுள்ளார். ஏற்கனவே விஜய் ஜில்லா படக்குழுவினர்களுக்கு பிரியாணி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விஜய் எதை செய்தாலும் கலாய்க்கும் ஒரு கூட்டம், அவர் பிரியாணி பரிமாறியதையும் கலாய்த்து டுவிட்டரில் கருத்து தெரிவித்தூள்ளது. புலி பசித்தாலும் புல்லை தின்னாது, ஆனால் பிரியாணி மட்டும் தின்னும் என்று ஒருவரும், அது புலி பிரியாணி அல்ல புளிச்சாதம் என்று ஒருவரும் கமெண்ட் செய்துள்ளனர். ஆனால் இளையதளபதி இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் போற்றுவார் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும் என்பதற்கிணங்க செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Home
»
cinema
»
cinema.tamil
»
puli
»
vijay
» "புலி" படக்குழுவினர்களுக்கு விஜய் பரிமாறியது பிரியாணியா...புளிச்சாதமா? டுவிட்டரில் அதிர்ச்சி தகவல்.
Saturday, February 21, 2015
Subscribe to:
Post Comments (Atom)
.jpg)
0 comments:
Post a Comment