Sunday, February 8, 2015

  எனது தோற்றத்துக்கு ஏற்ற கேரக்டரில் மட்டும் நடிப்பேன் :  தனுஷ் பேட்டி
பொருந்தாத வேடங்களை ஏற்று நடிக்க மாட்டேன் என்றார் தனுஷ்.இது பற்றி அவர் கூறியதாவது:எனது நடிப்பை, திறமையை ரஜினியுடன் ஒப்பிடுவது அடிப்படையிலேயே தவறானது. அவரது புகழ், திறமையை பார்க்கும்போது நானெல்லாம் அவர் சாதித்ததில் ஒரு சதவீதம் கூட சாதிக்கவில்லை என்பதுதான் உண்மை. என்றைக்குமே சிறந்தவர் அவர் ஒருவர்தான். பாலிவுட்டில் நிறைய ஹீரோக்கள் சிக்ஸ் பேக், எய்ட் பேக் என உடற்கட்டை பராமரித்து வருகின்றனர். அதனை சாதிக்க கடின உழைப்பு தேவை. 

அத்தகைய உடற்கட்டு பாராமரிப்பவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை எனது தகுதிக்கும், தோற்றத்துக்கும் ஏற்பவே படங்களையும் தேர்வு செய்கிறேன். இப்போதைக்கு என்னால் என்ன கதாபாத்திரம் செய்ய முடியுமோ அதைத்தான் செய்வேன். 5 வருடத்துக்கு பிறகு செய்ய வேண்டிய கதாபாத்திரங்களை இப்போதே இழுத்துப்போட்டுக்கொண்டு செய்ய விரும்பவில்லை. ஆனால் ஸ்கிரிப்ட்டுக்கு தேவையென்றால் உடலை வருத்தி செய்யத் தயார் என்றார்.

0 comments:

Post a Comment