
மோகன்லால், மீனா நடித்த மலையாள படம் ‘திரிஷ்யம்‘. தமிழில் ‘பாபநாசம்‘ பெயரில் ரீமேக் ஆகிறது. தெலுங்கில் ‘திருஷயம்‘, கன்னடத்தில் ‘த்ரிஷ்யா‘ பெயரிலும் ரீமேக் ஆனது. இதையடுத்து இந்தியிலும் இப்படம் ரீமேக் ஆக உள்ளது. நிஷிகாந்த் காமத் இயக்கும் இப்படத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார். போலீஸ் அதிகாரி வேடத்தில் தபு நடிக்கிறார்.
மலையாளம், தமிழில் இந்த வேடத்தை ஆஷா சரத் ஏற்றிருந்தார். தெலுங்கு ரீமேக்கில் இதே கதாபாத்திரத்தை நதியா ஏற்று நடித்தார்.
ஏற்கனவே மலையாளத்தில் கதாநாயகியாக நடித்த மீனா, தெலுங்கிலும் அதே வேடம் ஏற்று நடித்தார். இந்த வேடத்தை கன்னடத்தில் நவ்யா நாயர், தமிழில் கவுதமி நடிக்கிறார். இந்தியில் இந்த வேடத்தில் நடிக்கும் நடிகை தேர்வு நடந்து வருகிறது. நீண்ட நாட்களாக நடிக்காமல் ஒதுங்கி இருந்த தபு சமீபத்தில்தான் ‘ஹைதர்‘ இந்தி படத்தில் ரீ என்ட்ரி ஆனார். அதைத் தொடர்ந்து த்ரிஷ்யம் படத்தில் போலீஸ் அதிகாரி வேடம் ஏற்க உள்ளார்.
0 comments:
Post a Comment