Sunday, February 8, 2015

 டாலர் நோட்டுகளை அள்ளிவீசிய பூஜா குமார்
விஸ்வரூபம் படத்தில் ரீ என்ட்ரி ஆன பூஜா குமார், அதன் தொடர்ச்சியாக கமலுடன் விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் படங்களில் நடிக்கிறார். சமீபத்தில் இவர் அமெரிக்கா சென்றார். விலங்கு காப்பக தூதர், கேன்சர் விழிப்புணர்வு தூதர், கிரிக்கெட் மேட்ச் தூதர் என  சமீபகாலமாக எந்தவொரு நிகழ்ச்சிக்கும் சினிமா நட்சத்திரங்களை தூதராக்குவது அதிகரித்து வருவதுபோல் அமெரிக்காவில் உள்ள என்ஜிஓ அமைப்பிற்கு தூதராக பூஜா குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பூஜா தூதர் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் அமெரிக்கா தெருவில் நடந்தவர் கைநிறைய டாலர் நோட்டுக்களை வைத்துக்கொண்டு அப்பகுதியில் சென்றவர்களுக்கு டாலர் நோட்டுகளை கொடுத்து கவர்ந்தாராம். பிறகு அவர்களிடம், ‘நான் உங்களுக்கு கொடுப்பதுபோல் நீங்கள் யாருக்காவது இதுபோல் பணமோ அல்லது பொருளோ கிப்ட் கொடுத்து சந்தோஷப்படுத்துங்கள்' என்று கேட்டுக்கொண்டாராம்.

0 comments:

Post a Comment