ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தொடரும் உலக சாதனை படம்
கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான தில்வாலே துல்ஹானியா லீ ஜாயேங்கே' திரைப்படம் மும்பையில் உள்ள மராத்தா மந்திர் என்ற திரையரங்கில் தொடர்ச்சியாக 1009 வாரங்கள் ஓடி உலக சாதனை செய்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் இந்த படம் அந்த தியேட்டரில் இருந்து தூக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
இந்த திடீர் அறிவிப்பு காரணமாக அதிர்ச்சி அடைந்த இந்த படத்தின் நீண்ட நாள் ரசிகர்கள் இந்த படத்தை தியேட்டரில் இருந்து தூக்கக்கூடாது என்றும், தொடர்ந்து ஆதரவு தர ரசிகர்கள் தயாராக உள்ளதாகவும் கோரிக்கை விடுத்ததை அடுத்து, தியேட்டர் நிர்வாகம் இந்த படத்தை மீண்டும் ஒருசில வாரங்கள் ஓட்ட முடிவு செய்தது.
எனவே பிரேக் இல்லாமல் 1010வது வாரமாக தில்வாலே துல்ஹானியா லீ ஜாயேங்கே படத்தை ஓட்ட இருப்பதாக தியேட்டர் நிர்வாகிகள் கூறியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த படம் மீண்டும் ஒருசில நாட்கள் ஓடும் என்ற அறிவிப்பால் காதலில் வெற்றி அடைந்தவர்களை போல இந்த படத்தின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

0 comments:
Post a Comment