நானும் ஒருநாள் தனுஷ் மாதிரி ஆகிடுவேன். மெட்ராஸ் கலை
அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற 'கலையரசன் என்ற கலை தனது நீண்டநாள் ஆசை ஒன்று தனது மனைவியின் மூலம் நிறைவேறியதாகவும், இதனால் தான் கூடியவிரைவில் தனுஷ் மாதிரி ஆகிவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.
நடிகர் கலையின் நீண்ட நாள் ஆசை ரோல்ஸ்ராய் கார் வேண்டும் என்பதோ அல்லது ஜாகுவார் கார் வாங்க வேண்டும் என்பதோ இல்லை. காஸ்ட்லியான 'கேனான் டேல்' என்ற சைக்கிள் வாங்கவேண்டும் என்பதுதான் தன்னுடைய ஆசை என்று தனது ஆசை மனைவியிடம் கூறியிருந்ததாகவும், சமீபத்தில் வந்த தனது பிறந்த நாளில் மனைவி தனது ஆசையை நிறைவேற்றி வைத்ததாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்த சைக்கிளின் விலை ரூ.40,000 என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் வெற்றி பெற மிகவும் முக்கியமான விஷயம் உடலை ஃபிட்டாக வைத்திருப்பதுதான். அதற்கு சைக்கிளிங் ஒன்றுதான் பெஸ்ட் வழி என்பதால் கேனான் டேல் சைக்கிளை வாங்க ஆசைப்பட்டதாகவும் தனது ஆசை தற்போது மனைவியின் மூலம் நிறைவேறிவிட்டதால் இனி தினமும் ஒர்க் அவுட் செய்து விரைவில் விஜய், தனுஷ் மாதிரி ஸ்லிம்மாக மாற உள்ளதாகவும் கூறியுள்ளார்.
கலை தற்போது பாபிசிம்ஹாவுடன் உறுமீன்' என்ற படத்தில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கின்றார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment