சர்வதேச மார்க்கெட்டை பிடித்த காக்கி சட்டை
கமல், ரஜினி, அஜீத், விஜய், சூர்யா போன்ற பெரிய ஸ்டார்களுக்கு மட்டும்தான் தமிழகத்தில் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும், வெளிநாட்டிலும் மார்க்கெட் இருந்தது. தற்போது முதல்முறையாக சிவகார்த்திகேயனுக்கும் வெளிநாட்டு மார்க்கெட் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
வரும் 27ஆம் தேதி ரிலீஸாகவுள்ள காக்கி சட்டை படம் பிரான்ஸ் நாட்டில் 20 தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி ஐரோப்பாவில் உள்ள ஒருசில நாடுகளிலும் காக்கி சட்டை படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர் அதிபர்கள் முன்வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முதல்முறையாக பெரிய ஹீரோ அல்லாத ஒரு படம் வெளிநாட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்ற பெருமையை காக்கி சட்டை அடைந்துள்ளது.
இந்நிலையில் காக்கி சட்டை படம் தமிழகத்தில் 400 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதுதான் சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிகளவு தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெற்றி பெற்றால் சிவகார்த்திகேயனை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

0 comments:
Post a Comment