ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்ற கொள்கையை திருத்திய பிறகு சத்யராஜ், பிரபு, கார்த்திக் போன்ற முன்னாள் ஹீரோக்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அதேபோல் பார்த்திபனுக்கும்.
வெங்கட்பிரபுவின் மாஸ் படத்தில் நடித்துவரும் இவர் விஜய் சேதுபதி நடிக்கும் நானும் ரவுடிதான் படத்தில் முக்கியமான வேடம் ஏற்கிறார். தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா ஹீரோயின். ராதிகா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். தற்போது பார்த்திபனும் அவர்களுடன் இணைந்துள்ளார். அனிருத் இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவில் படம் விரைவாக தயாராகி வருகிறது.

0 comments:
Post a Comment