கமல்ஹாசன் படத்து டெக்னீஷியன் ஒருவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை போல இதுவும் தற்செயலானதுதான். கமல்ஹாசனின் உத்தமவில்லன் படத்தின் சவுண்ட் மிக்ஸராக அதாவது ஒலிக் கலப்பாளராக பணியாற்றி வருபவர் கிரேக்மேன். இவர் ஒரு ரீரெக்கார்டிங் மிக்ஸர் ஆவார். உத்தமவில்லன் படத்திற்காக இவரை பிரத்யேகமாக அழைத்து வந்துள்ளனர். இவருக்குத்தான் தற்போது ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
இன்று அமெரிக்காவில் நடந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் விப்ளாஷ் என்ற படத்துக்கு சில ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. அதில் ஒன்று சவுண்ட் மிக்ஸிங்குக்கான விருது. இவ்விருதை கிரேக்மேன், பென் வில்கின்ஸ், தாமஸ் கர்லி ஆகியோர் பெற்றுள்ளனர். இந்தியப் படம் ஒன்றுக்கு கிரேக்மேன் பணியாற்றுவது இதுவே முதல் முறையாகும். முதல் படத்தில் பணியாற்றும்போதே அவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது உத்தமவில்லன் பட யூனிட்டை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம். என்னவோ போங்கப்பா, கமல் ஆஸ்கரை வேண்டாம் என்று கூறினாலும், ஆஸ்கர் விருது கமலை விடுவதாகத் தெரியவில்லை...!
Home
»
cinema
»
cinema.tamil
»
kamal
» கமலுக்குக் கிடைக்காட்டியும், கமல் பட டெக்னீஷியனுக்கு ஆஸ்கர் கிடைச்சிருச்சே!
Tuesday, February 24, 2015
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment