சமீபத்தில் வெளிவந்த ‘லிங்கா’, ‘என்னை அறிந்தால்’ படங்களுக்குப் பிறகு வேறு தமிழ்ப் படங்களிலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார் நடிகை அனுஷ்கா.
தெலுங்கில் ஏற்கெனவே கமிட்டான பாகுபலி, ருத்ரமாதேவி ஆகிய படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இந்நிலையில் அனுஷ்கா பிவிபி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். படத்துக்கு சைஸ் ஜீரோ’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் அனுஷ்காவுடன் ஆர்யா, மாஸ்டர் பரத் நடிக்கிறார்கள்.
ஊர்வசி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ருதி ஹாசன் கௌரவ தோற்றத்தில் வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் தயாராகும் இப்படத்தை ராகவேந்திர ராவின் மகன் பிரகாஷ் கொவேலமுடி இயக்குகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இதில் காதலை நகைச்சுவை கலந்து சொல்லயிருக்கிறார்கள்.
நேற்று இப்படத்தின் பூஜை நிகழ்ச்சி ஐதரபாத்தில் நடைபெற்றது. படப்பிடிப்பை தெலுங்கு திரையுலகின் மூத்த இயக்குநர் திரு. ராகவேந்திர ராவ் இயக்க, திருமதி. PVP ஒளிப்பதிவு செய்ய, கனிகா திலோன் கொவேலமுடி கிளாப் அடித்து தொடங்கி வைத்தனர்.

0 comments:
Post a Comment