Tuesday, February 24, 2015


anirudhசூர்யா தற்போது மாஸ் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

இந்த படத்தையடுத்து விக்ரம் குமார் இயக்கும் 24 என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சூர்யாவே தயாரிக்கவிருக்கிறார். அதோடு பாண்டிராஜ் இயக்கும் ஹைக்கூ படத்தையும் தயாரிக்கிறார். தோடு அற்த கடத்தில் சூர்யா சிறு கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
இதனையடுத்து சிங்கம், சிங்கம்2 படங்களை தொடர்ந்து மீண்டும் இணைவிருக்கின்றனர். சிங்கம் 2 படத்தின் தொடர்ச்சியாக வருவது போல் திரைகதை அமைந்துள்ளாராம். சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்த தேவி ஸ்ரீபிரசாத் இந்த படத்திலிருந்து தூக்கி விட்டு ‘சிங்கம் 3′ படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்று அறிவித்திருக்கிறார்கள்.
கொலைவெறி பாடல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான அனிருத் அதன்பிறகு விஜய்யின் கத்தி படத்திற்கு இசையமைத்தார். இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டானதோடு பின்னணி இசையும் பெரிய அளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து அஜித், சிவா இணையும் படத்திற்கும் அனிருத்தான் இசை. அதோடு ஷங்கரின் அடுத்த படத்திற்கும், கௌதமின் அடுத்த படத்திற்கும் அனிருதே இசையமைப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில் சூர்யா பட வாய்ப்பையும் கைப்பற்றியுள்ளார்.

0 comments:

Post a Comment