Sunday, February 22, 2015

தமிழ் சினிமாவை காட்டிலும் சமந்தா தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஆந்திராவில் ரசிகர்கள் பட்டாளமும் அதிகமாகவே இருக்கிறது. எனவே கடை திறப்பு விழாவிற்கும் பெரும்பாலும் சமந்தாவையே அழைக்கிறார்கள்.
ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்ட வணிகவளாகம் திறப்பு நிகழ்ச்சிக்கு சமந்தா அழைக்கப்பட்டு இருந்தார். எனவே சமந்தாவை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.
சமந்தா கையை பிடித்து இழுக்கவும் முயற்சித்தனர். இதை கட்டுப்படுத்துவதற்காக போலீஸார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அந்த இடம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
samantha fans

0 comments:

Post a Comment