Monday, February 23, 2015


அடிப்படை நியாயம், நுனிப்படை நியாயத்தையெல்லாம் விட்டுத் தொலைத்துவிட்டு ‘எவ்ளோ ரிட்டர்ன்?’ என்கிற பதிலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது லிங்கா விவகாரம். பணத்தை திருப்பி தராதீங்க என்று குறுக்கே நிற்பதே நடிகர் சங்க தலைவர் சரத்குமாரும், நடிகர் விஜய்யும்தான் என்றொரு செய்தி காற்று வாக்கில் கசிந்து, புயலாக அடிக்க ஆரம்பித்தது. ஐயய்யோ… நாங்க அப்படி சொல்லவே இல்லை என்று பதிலளிக்க வேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்பட்டார்கள் இருவருமே.
இதில் ஒரு ஸ்டெப் முன்னேறிய சரத், ‘நான் விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி தரச்சொல்லிதான் ஆரம்பத்திலிருந்தே பேசிகிட்டு இருக்கேன்’ என்று கூற, கோடம்பாக்கத்தில் முணுமுணுப்பு. இருந்தாலும், பேச்சு வார்த்தைகள் இப்போது அவர் வழியேதான் நடக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் கூடிய முக்கியஸ்தர்கள் சங்க தலைவர் தாணு தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஒருபுறம், சரத்குமார், தாணு, வேந்தர் மூவிஸ் சிவா உள்ளிட்ட சிலரும் மறுபுறம் லிங்கா விநியோகஸ்தர்களும் அமர, காரசார பேச்சு வார்த்தை பல மணி நேரம் நடந்தது.
இறுதியாக எல்லா விஷயத்தையும் ரஜினி காதுக்கு கொண்டு செல்லும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட சரத்குமார், இன்னும் சில தினங்களில் எவ்வளவு செட்டில்மென்ட் என்பதை அறிவிப்பாராம். இரு தரப்புக்கும் நியாயமான செட்டில்மென்ட்டாக இருக்கும் என்கிறார்கள். அநேகமாக அது பதினைந்திலிருந்து இருபது சி க்குள் முடியலாம் என்கிறார்கள்.
மறுபடியும் நாடக அறிஞர்களுக்கு வேலை வச்சுர மாட்டீங்கதானே?

0 comments:

Post a Comment