தமிழில், காசி, என் மன வானில் உட்பட சில படங்களில் நடித்துள்ள, மலையாள முன்னணி நடிகையான காவ்யா மாதவன், தற்போது தனது
கணவரைவிட்டு பிரிந்தபின் மீண்டும் மலையாள சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அவரது இரண்டாவது இன்னிங்க்ஸ் கூட நன்றாகத்தான் ஆரம்பித்திருக்கிறது. அதற்கேற்றமாதிரி செலக்டிவான நடிப்புக்கு ஸ்கோப் இருக்கக்கூடிய படங்களாகத்தான் தேர்ந்தெடுத்து வருகிறார் காவ்யா மாதவன்.
ஆனால் இவர் அடுத்து திருமணம் செய்துகொள்ளப்போவது யாரை என்கிற கேள்வியை கேட்டு, காவ்யா மாதவனுக்கு பேஸ்புக்கில் 'அன்பு' டார்ச்சர் கொடுத்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.. இன்னும் சிலர் ஒருபடி மேலேபோய் யாருடைய போட்டவையாவது சேர்த்து வைத்து இவரைத்தான் காவ்யா மாதவன் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என தவறான தகவல்களை பரப்புகிறார்களாம். ஆனால் காவ்யா மாதவன் சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், “இனி மீண்டும் திருமண பந்தத்திற்குள் நுழையும் எண்ணம் இல்லை.. அதைவிட இந்த வாழ்க்கை எனக்கு பிடித்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
Friday, February 6, 2015
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment