முன்னணியில் இருக்கும் கதாநாயகி திருமணம் செய்து கொண்டால்போதும்...அந்த நிமிடமே அந்த நடிகையை கைகழுவிவிடுவார்கள். சிம்ரன்,
தேவயாணி, ஜோதிகா, மீனா என இதற்கு எத்தனையோ நடிகைகளை உதாரணமாக சொல்லலாம். சமீபத்திய உதாரணம் அமலாபால். முன்னணி நடிகையாக வலம் வந்த அமலாபால், இயக்குநர் விஜய்யை திருமணம் செய்ததும் சட்டென மார்க்கெட் இழந்தார். திரையுலகின் இந்த வழக்கத்துக்கு மாறாக திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் கதாநாயகியானவர், தற்போது அதிகமான படங்களில் நடித்து வருகிறார். அவர்...சான்ட்ரா எமி.
சின்னத்திரை நிகழ்ச்சித்தாகுப்பாளர் பிரஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் இவர். சான்ட்ராவும் சின்னத்திரை நடிகைதான். இந்நிலையில் ஒரு சில படங்களில் தலைகாட்டிய சான்ட்ரா கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான சுற்றுலா படத்தில் கதாநாயகியாக நடித்தார். சமீபத்தில் ரிலீசான தரணி மற்றும் சிவப்பு எனக்கு பிடிக்கும் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அடுத்து பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்கும் உறுமீன் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கிறார் சான்ட்ரா எமி!
சக்திவேல் பெருமாள்சாமி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட வகையில் ஜெனிஃபர் எனும் மாடர்ன் கேரக்டர் கிடைத்துள்ளதாம்! இப்படம், ஃபேன்டசி த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது! இதுவரை இரண்டாம்நிலை ஹீரோக்கள் மற்றும் புதுமுக ஹீரோக்கள் உடன் மட்டுமே நடித்து வந்த சான்ட்ரா எமிக்கு உறுமீன் படத்தில் பாபிசிம்ஹாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
Friday, February 6, 2015
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment