
‘லிங்கா’ நஷ்ட ஈடு கேட்டு போராடி வரும் வினியோகஸ்தர்களைப் பற்றி விசாரித்த விஜய், தன்னுடைய பிஆர்ஓ பி.டி.செல்வகுமாரிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.
எந்த வித முன்னறிவிப்புமின்றி ஒரு பிரியாணி விருந்திற்கு சிங்காரவேலனையும், ‘லிங்கா’ பட நெல்லை வினியோகஸ்தரான ரூபனையும் அழைத்திருக்கிறார்.
இவர்கள் அந்த விருந்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்காத விஜய் ஆச்சரியத்தோடு அவர்களை வரவேற்று பாசத்தோடு பிரியாணி பரிமாறினார்.
“நான் உங்களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டாமென்று எப்பங்கண்ணா சொன்னேன்,” என்று சிரித்துக் கொண்டே கேட்க, “நாங்கள் இரண்டு முக்கிய நடிகர்கள் என்றுதான் சொன்னோம், நீங்களும் சரத்குமாரும் அல்ல,” என்பதை பலருக்கும் தெரிவித்தோமே என்று பதிலுக்கு சிங்காரவேலனும் சிரித்துக் கொண்டே சொன்னாராம்.
இந்தப் பிரச்சனையால் எங்களுக்கு யாரும் படம் தர மாட்டார்கள் போலத் தெரிகிறது என சிங்காரவேலன் கூற, ‘அப்படியெல்லாம் இல்லங்கண்ணா, ‘புலி’ படத்தின் திருச்சி வினியோக உரிமையை வேண்டுமானால் நீங்க வாங்கிக்குங்கண்ணா,” என்று விஜய்யும் பதிலுக்கு சொல்ல உடனே தன்னுடைய பி.ஆர்.ஓ பி.டி.செல்வகுமாரை அழைத்து, ‘புலி’ படத்தின் திருச்சி ஏரியா உரிமையை கொடுப்பதில் சிங்காரவேலனுக்கு முன்னுரிமை தருமாறு கூறியிருக்கிறார்.
இதன் மூலம் லிங்கா விவகாரத்தில் விஜய்யின் தலையீடு எந்த ரூபத்திலும் இல்லை என்பது தெரிகிறது.
0 comments:
Post a Comment