Monday, February 2, 2015

என்னை அறிந்தால் படத்தில் மீண்டும் ஒரு மாற்றம்? - Cineulagam

என்னை அறிந்தால் பொங்கலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு பின் சில காரணங்களால் ஜனவரி 29 வெளிவரும் என கூறப்பட்டது. பின் தனிக்கை குழுவிற்கு படம் சென்று யு/ஏ சான்றிதழ் பெற்றுதால், படம் மீண்டும் ஒரு வாரம் தள்ளிப்போனது.
தற்போது இந்த வாரம் படம் வரும் தருவாயில் படத்தின் சென்ஸார் சான்றிதழில் 2 மணி 56 நிமிடம் இப்படம் ஓடும் என குறிப்பிட்டு இருந்தனர்.

ஆனால், அருண் விஜய் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘‘2 மணி நேரம் 42 நிமிடங்கள் உங்களை மெய்மறக்கச் செய்யவிருக்கும் அனுபவத்திற்கு தயாராகுங்கள் ரசிகர்களே” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் படத்தில் சில காட்சிகளை நீக்கியிருக்கலாம் என்று தெரிகிறது.

0 comments:

Post a Comment