அஜீத்தை அடுத்து அருண் விஜய் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் தான் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் ரிலீஸாக உள்ள நிலையில் அஜீத் குமார் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு வந்தார். இந்நிலையில் அஜீத்தை அடுத்து என்னை அறிந்தால் பட வில்லன் அருண் விஜய்யும் திருப்பதி சென்று வந்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
திருப்பதியில் இருந்து திரும்பிக் கொண்டிருக்கிறேன்... அருமையான தரிசனம். அனைவருக்கும் நல்லது நடக்கட்டும்... ஆண்டன் அருள்புரிவானாக என்று தெரிவித்துள்ளார். இந்த படம் தனக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று அருண் விஜய் நம்புகிறார். இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு அளித்ததற்காக அவர் கௌதம் மேனனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Wednesday, February 11, 2015
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment