Thursday, February 12, 2015

உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பிரமாண்ட நகைச்சுவை திருவிழா - Cineulagam
ஐரோப்பிய நாடுகளில் முதன்முறையாக இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமான முறையில் காமெடி திருவிழா நடைபெற உள்ளது.
வரும் 28ம் தேதி சனிக்கிழமை புலம் பெயர்ந்த நாடுகளில் பிரபலமான Stand-up காமெடியன் குட்டி ஹரியின் காமெடி நைட்ஸ் என்ற நிகழ்ச்சி வெம்ப்லியில் பிரம்மாண்டமான முறையில் நடக்க இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் 20 முதல் 70 வயதிற்குட்பட்ட அனைத்து தரப்பிரனரக்குமான முன்னணி காமெடியன்கள் பலர் உள்ளனர். இவர்கள் பேஸ்புக் அல்லது டிவிட்டரில் பிரபலமானவர்கள் மட்டுமில்ல இதற்கு முன் பல நிகழ்ச்சிகளில் காமெடியில் பட்டைய கிளப்பியவர்கள்.
தமிழர்களின் நிகழ்ச்சியில் இசை இல்லாமல் இருக்குமா? உங்களை மெய்மறக்க செய்யும் ரம்மியமான இசையில் பிரபல பாடகர்களின் குரலும் சங்கமிக்க உள்ளது. ஒவ்வொரு நொடியும் உங்களை உற்சாகமூட்டும் பலதரப்பட்ட கலைநிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன.
மொத்தம் 90 நிமிடங்கள் உள்ள இந்த நிகழ்ச்சியில் "One minute open mic" session என்ற பகுதியும் உள்ளது. ஒரு நிமிடம் உங்களது காமெடி திறமையை காட்டி மக்களை சிரிக்க வைக்கலாம்.
சந்தானம், வடிவேலுவையெல்லாம் மிஞ்சுற எத்தனையோ காமெடியன்கள் வெளிச்சத்துக்கு வராமல் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கான ஒரு அரிய வாய்ப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
Stand-up காமெடியில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி உங்களை உலகறிய வைக்கலாம்.

0 comments:

Post a Comment