Friday, February 20, 2015

தனுஷ் எனக்கு சம்பளமே தரவில்லை! சிவகார்த்திகேயன் ஆதங்கம் - Cineulagam
தமிழ் சினிமாவில் நடித்த சில படங்களிலேயே உச்சத்தை தொட்டவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் விரைவில் காக்கிசட்டை படம் வரவிருக்கிறது.
இதற்காக தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றில் பேட்டியளித்த இவரிடம், நீங்கள் சம்பள விஷயத்தில் மிகவும் கறாராக இருக்கிறீர்கள் என்று ஒரு தகவல் வெளியாகிறதே? என்று கேட்டுள்ளனர்.
சிவகார்த்திகேயன் ” ‘காக்கிச்சட்டை’ படத்துக்கு என்ன சம்பளம் என்றே எனக்குத் தெரியவில்லை. இதுவரை தனுஷ் அதைப் பற்றிச் சொல்லவே இல்லை. அவர் எப்போது கொடுக்கிறாரோ அப்போதுதான் எனக்கே அது தெரியும்.
தற்போது நடித்து வரும் ‘ரஜினிமுருகன்’ படத்துக்கு பிறகே நான் நடிக்கவிருக்கும் படங்களுக்கு என் ஊதியம் என்ன என்பதில் நான் நிச்சயமாக டிமாண்ட் பண்ணும் எண்ணத்துடன் இருக்கிறேன். நானும் செட்டில் ஆகணுமே” என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment